சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தால் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
இந்த 21 செப்புப் பட்டயங்களும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் கல்வெட்டுப் பொறிப்புகளைக் கொண்டுள்ளன.
இச்செப்பேடுகள் முதலாம் ராஜேந்திர சோழனின் அரச முத்திரையைக் கொண்டு உள்ளன மற்றும் சோழ மற்றும் ஸ்ரீவிஜய பேரரசுகளைப் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பௌத்த விகாரைக்காக 26 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இந்த செப்பேடுகள் 1862 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்தன, தற்போது அவை பாதுகாப்பு மற்றும் காட்சிப் படுத்துதலுக்காக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைக்கப்படும்.