TNPSC Thervupettagam

சோஹ்ராவில் மழைப் பொழிவில் வீழ்ச்சி

July 11 , 2025 3 days 27 0
  • உலகின் மிக ஈரப்பதமான இடமாக அறியப்படும் மேகாலயாவில் உள்ள சோஹ்ராவில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 1,095.4 மில்லி மீட்டர் மழைப் பொழிவு மட்டுமே பதிவானது.
  • இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான மழைப் பொழிவில், அதாவது 3,041.2 மில்லி மீட்டர் அளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆனது இதனை இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிகக் கடுமையான மழைப் பொழிவு அளவின் வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கூறியது.
  • 2005 ஆம் ஆண்டிலிருந்து, சோஹ்ராவின் வருடாந்திர மழைப்பொழிவானது இயல்பை விட 11,000 மிமீ குறைவாக சுமார் 8,000 மிமீ முதல் 9,000 மிமீ வரையிலான அளவில் பதிவாகியது.
  • 1974 ஆம் ஆண்டில், சோஹ்ரா பகுதியில் ஓராண்டில் சுமார் 24,555 மிமீ மழைப் பொழிவு பதிவாகி உலக சாதனையாக அமைந்தது.
  • தற்போதைய வருடாந்திரச் சராசரியானது தற்போது அந்தச் சாதனையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்