அருணாச்சலப் பிரதேசத்தின் லெபராடா மாவட்டத்தில் உள்ள பசாரில் 'சௌனா புக்கு சூலு' என்ற பிகோனியாவின் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்கவர் சிவப்பு இலைகளைக் கொண்டுள்ள இது துணை முதல்வர் சௌனா மெய்னின் நினைவாக "மகத்தான சிவப்பு" என்று பொருள்படும் 'சௌனா புக்கு சூலு (ஆர்யரக்தா)' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிகோனியாக்கள், 1,800க்கும் மேற்பட்ட நீடித்து வாழும் பூக்கும் தாவரங்களைக் கொண்ட பிகோனியாசி இனத்தைச் சேர்ந்தவையாகும்.
இந்தத் தாவரங்கள் ஈரப்பதமான பகுதி வெப்பமண்டல மற்றும் வெப்ப மண்டலக் கால நிலைகளில் காணப் படுகின்றன மற்றும் நிழல், ஈரப் பதமான சூழல்களில் செழித்து வளர்கின்றன.