மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது தேசிய சுகாதார சுயவிவரம் 2018 இன் 12வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது சுகாதாரச் சேவைகள் பொது இயக்குநரகத்தின் கீழ் (Directorate General of Health Services) மத்திய சுகாதார நுண்ணறிவு வாரியத்தால் (Central Bureau of Health Intelligence – CBHI ) தயாரிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சுகாதார விவரங்களை CBHI வெளியிடுகிறது.