அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரான ஜக்தீப் S. சோக்கர் சமீபத்தில் காலமானார்.
இந்தியாவில் தேர்தல் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதற்காக 1999 ஆம் ஆண்டில் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கத்தை (ADR) இவர் இணைந்து நிறுவினார்.
வேட்பாளர்களின் குற்றவியல், நிதியியல் மற்றும் கல்வி சார் விவரங்களை வெளியிடுவதை கட்டாயமாக்குவதற்காக முன்மொழியப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்குகளை ADR முன்னெடுத்து நடத்தியது.
ADR மனுக்கள் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்வதற்கும் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான செயல்முறையை சீர்திருத்துவதற்கும் பங்களித்தன.
அவர் சர்வதேச இதழ்களில் கல்வி ஆராய்ச்சிகளுக்கு பங்களித்தார் மற்றும் ஆஜீவிகா பீயூரோ போன்ற பொது நலன் அமைப்புகளை ஆதரித்தார்.