பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா (PMBJAP - Pradhan Mantri Bharatiya Janaushadhi Pariyojana) என்பதின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஜன் அவுசாதி கேந்திராவின் மருந்தாளுநர்கள் மூத்தக் குடிமக்கள் மற்றும் இதர நோயாளிகள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய மருந்துப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.
PMBJAP ஆனது நாட்டில் உள்ள குடிமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
இது மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துப் பொருட்கள் துறையினால் தொடங்கப்பட்டுள்ள ஒரு பிரச்சாரமாகும்.
இந்திய மருந்துப் பொதுத் துறை நிறுவனங்கள் அமைப்பானது, (BPPI - Bureau of Pharma PSUs of India) PMBJAPஐ செயல்படுத்தும் அமைப்பாகும்.
BPPI ஆனது மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.