இந்திய மருத்துவ பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் பணியகமானது (Bureau of Pharma PSUs of India-BBPI), ஜனவரி 2018 முதல் 18 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் 25 தொகுதி மருந்துகள் தரம் குறைந்தவைகளாக உள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
BBPI ஆனது மருந்தியல் துறையின் கீழ் செயல்படுகின்றது.
இது மத்திய அரசின் மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் முதன்மை திட்டமான பிரதம மந்திரி பாரதீய ஜன் அவுஷாத் பரியோஜனாவை செயல்படுத்துவதற்கான பிரத்தியேக அமைப்பு ஆகும்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி நாடு முழுவதும் 4677க்கும் அதிகமான ஜன் அவுஷாதி கேந்திராக்கள் செயல்படுகின்றன.