TNPSC Thervupettagam

ஜன் ஔஷதி கேந்திரா மையங்களின் விரிவாக்கம்

September 17 , 2025 16 hrs 0 min 24 0
  • ஏழு பெருநகரங்களில் உள்ள ஜன் ஔஷதி கேந்திரா மையங்களுக்கான குறைந்தபட்ச தொலைவு விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
  • அந்தப் பெருநகரங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகியனவாகும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 46 நகரங்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும்.
  • இது போன்ற நகரங்களில், ஏற்கனவே அமைந்துள்ள மையங்கள் நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக ஆகியிருந்தால் மட்டுமே ஒரு கிலோமீட்டர் தூர விதி பொருந்தும்.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் உள்ள ஜன் ஔஷதி மையங்கள் மலிவு விலையிலான பொதுப் பயன்பாட்டு மருந்துகளை வழங்குகின்றன.
  • தற்போது இந்தியா முழுவதும் 11,000க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி மையங்கள் இயங்கி வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்