பிரதமர் கடன் வழங்கீட்டு அரசுத் திட்டங்களுக்கான தேசியத் தளம் ஒன்றைத் துவக்கி வைத்தார்.
இது புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நிதி அமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ‘நினைவு வாரக் கொண்டாட்டங்களின்’ போது தொடங்கப் பட்டது.
ஜூன் 6 முதல் ஜூன் 11 வரையிலான இந்த நிகழ்வானது, 'சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின்' ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது.
ஜன் சமர்த் தளம் என்பது அரசாங்கக் கடன் திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒற்றைச் சாளர டிஜிட்டல் தளம் ஆகும்.
பயனாளிகளை நேரடியாக கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைக்கும் வகையில் இது முதல் தளமாகும்.