TNPSC Thervupettagam

ஜன் விஸ்வாஸ் (விதிகளின் திருத்தம்) மசோதா, 2025

August 23 , 2025 6 days 59 0
  • அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜன் விஸ்வாஸ் (விதிகளின் திருத்தம்) மசோதாவினை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மசோதா அவற்றின் பொருந்தக்கூடிய தன்மையை எளிதாக்குவதற்காக 16 மத்தியச் சட்டங்களில் 355 விதிகளை திருத்த முயல்கிறது.
  • இது 'வாழ்க்கையை எளிதாக்குவதை' ஊக்குவிக்க 288 விதிகளை குற்றமற்றதாக்கவும், 67 விதிகளை திருத்தவும் முன்மொழிகிறது.
  • இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு தேர்வுக் குழுவிற்கு அனுப்புமாறு சபாநாயகரிடம் அரசாங்கம் கோரியது.
  • இந்த மசோதா 42 மத்தியச் சட்டங்களில், 183 விதிகளை குற்றமற்றதாக்கிய 2023 ஆம் ஆண்டு ஜன் விஸ்வாஸ் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது.
  • முதல் முறையாக மேற்கொள்ளப்படும் விதி மீறல்களுக்கு, 10 சட்டங்களின் கீழான 76 குற்றங்களுக்கு ஆலோசனை அல்லது எச்சரிக்கை சார்ந்த தண்டனைகளை மசோதா முன்மொழிகிறது.
  • சிறிய தவறுகளுக்கான சிறைத் தண்டனைகளுக்குப் பதிலாக பண அபராதங்கள் அல்லது எச்சரிக்கைகள் விதிக்கப்படும், மீண்டும் மீண்டும் செய்யும் குற்றங்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்