ஜன் ஷிக்ஷான் சன்ஸ்தான்ஸ்க்கான (Jan Shikshan Sansthans-JSS) புதிய வழிகாட்டுதல்களை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்க்கான அமைச்சகமானது (MSDE - Ministry of Skill Development and Entrepreneurship) வெளியிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளானது ஜன் ஷிக்ஷான் சன்ஸ்தான்ஸ் அமைப்பை மீள் இயக்கம் செய்யவும் புத்துயிரூட்டலை மேற்கொள்வதற்கான MSDE-ன் முயற்சியின் ஒரு பகுதியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளின் சிறப்பம்சங்களாவன:
கற்பித்தலை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் திறமை தகுதி கட்டமைப்பிற்காக JSS திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை சீரமைத்தல்.
மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் பொறுப்புடைமை மற்றும் சுதந்திரம் அளிப்பதன் மூலம் JSS –ன் அதிகாரங்களைப் பரவலாக்குதல்.
JSS ஆனது கல்வியறிவற்றோர், புதிதாக கற்றோர் மற்றும் பள்ளிக்கல்வியில் இடைநின்றோர் ஆகியோருக்கு திறமைகளை அடையாளம் காண்பதன் மூலம் அவர்களின் பகுதிகளில் தேவை இருக்கும் தொழில்முறைப் பயிற்சிகளை அளிப்பதற்கும் நிறுவப்படுகின்றன.