TNPSC Thervupettagam

ஜப்பானின் செயல்படும் எரிமலை - கிகாய் கால்டெரா

August 2 , 2026 17 days 97 0
  • ஜப்பானின் கிகாய் கால்டெராவின் அடியில் உள்ள மாக்மா நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்புவதை அறிவியலாளர்கள் கவனித்துள்ளனர் என்ற நிலையில் இது பெரிய எரிமலைகள் பெரும் வெடிப்புகளுக்குப் பிறகு எவ்வாறு மீட்கப்படுகின்றன என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
  • கிகாய் கால்டெரா என்பது ஜப்பானின் கியூஷு தீவின் தெற்கே கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய நீர்மூழ்கி கால்டெரா ஆகும்.
  • இந்த கால்டெரா சுமார் 19 கிலோமீட்டர் விட்டம் கொண்டது மற்றும் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்துள்ள மூன்று சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது.
  • சுமார் 7,300 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோலோசீன் சகாப்தத்தின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில் ஒன்றை இது உருவாக்கியதுடன் அதில் சுமார் 150 கன கிலோ மீட்டர் சாம்பல் வெளியேற்றப்பட்டது.
  • இந்த வெடிப்பு எரிமலை வெடிப்பு குறியீட்டில் (VEI) 7 என்ற அளவைக் கொண்டிருந்தது, மேலும் கால்டெரா எரிமலைத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதோடு இது சமீபத்திய ஆய்வுகள் புதிய லாவா குவிமாடம் உருவாவதைக் குறிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்