TNPSC Thervupettagam

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி விரிவாக்கம்

August 18 , 2025 4 days 72 0
  • ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டத்தைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
  • 1 முதல் 15 வயது வரையிலான மொத்தம் 27,63,152 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசியின் ஒற்றைத் தவணை வழங்கப்படும்.
  • இந்தத் தடுப்பூசி வழங்கீடு இயக்கமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பக இல்லங்களில் நடத்தப்படும்.
  • மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கடுமையான சிக்கல்கள் அல்லது மரணத்திற்கு வழி வகுக்கின்ற JE என்பது கொசுக்களால் பரவும் ஒரு விலங்கு வழி வைரஸ் தொற்று நோயாகும்.
  • JE தடுப்பூசியானது, 2007 ஆம் ஆண்டு முதல் தொற்றுள்ள 15 வருவாய் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  
  • தற்போது இந்தத் திட்டம் ஆனது பின்வரும் மேலும் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் விரிவுபடுத்தப் பட்டுள்ளது: சென்னை (ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட இரண்டு மண்டலங்களைத் தவிர்த்து), செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் வேலூர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்