March 28 , 2026
3 days
49
- பசிபிக் பெருங்கடலில் உள்ள மினாமிடோரிஷிமா தீவு அருகே ஜப்பான் ஒரு மிகப் பெரிய ஆழ்கடல் அபூர்வ மண் தாதுப் படிவைக் கண்டுபிடித்துள்ளது.
- இந்த படிவில் இட்ரியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் போன்ற சுமார் 1,600 லட்சம் டன் அபூர்வ மண் தாதுக்கள் உள்ளன.
- 'சிக்யூ' என்ற அதிநவீன துளையிடும் கப்பலைப் பயன்படுத்தி சுமார் 6,000 மீட்டர் ஆழத்தில் இது கண்டறியப்பட்டது.
- மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் நவீன மின்னணுச் சாதனங்களின் தயாரிப்பிற்கு இந்தத் தாதுக்கள் மிக முக்கியமானவை.
- இந்தச் சேமிப்பு சில முக்கிய தாதுக்களுக்கான உலகளாவிய தேவையை 700 ஆண்டுகள் வரை பூர்த்தி செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Views:
49