ஜம்மு-காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் உள்ள செனானி நஷ்ரி சுரங்கப் பாதையை மறுபெயரிடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mookerjee (SPM) Tunnel) சுரங்கம் என்று பெயர் மாற்றப்பட உள்ளது.
9 கி. மீ தொலைவு உள்ள இந்த சுரங்கப் பாதையானது நாட்டின் மிக நீளமான அதிநவீன சுரங்கப் பாதையாகும். இது உதம்பூரை ஜம்முவில் உள்ள ரம்பன் எனும் இடத்தோடு இணைக்கிறது.
சியாமா பிரசாத் முகர்ஜி (1901 - 1953) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் தனிச் சுதந்திர அமைச்சரவையில் தொழில் மற்றும் வழங்கல் அமைச்சராக பணியாற்றினார்.