ஜம்மு காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்
October 12 , 2018 2407 days 725 0
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
ஜம்முவில் சுமார் 80 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
காஷ்மீரில் 3.4 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
ஷரத்து - 35Aன் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டின் காரணமாக, மாநிலத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மெஹ்பூபா முப்தியின் பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆகிய இரண்டும் தேர்தலில் பங்கேற்கவில்லை.
ஷரத்து 35A
ஷரத்து 35A ஆனது ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரையின்படி அப்போதைய குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தின் உத்தரவின் பேரில் 1954ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 35A ஆனது ‘நிரந்தர குடியிருப்பாளர்களை’ வரையறை செய்யவும் மற்றும் அவர்களுக்கான சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கவும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சட்ட சபைகளுக்கு அதிகாரமளிக்கிறது.