மத்திய உள்துறை அமைச்சகமானது ஜம்மு காஷ்மீரில் வேளாண் நிலத்தைத் தவிர எந்தவொரு நிலத்தையும் இந்தியக் குடிமக்கள் வாங்க அனுமதிக்கும் ஒரு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய அறிவிக்கையின் கீழ், முதல் முறையாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் மனைவி தற்பொழுது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவராகவே கருதப் படுவார்.
இதற்கு முன்பு, நிரந்தரக் குடியிருப்பு அட்டை வைத்துள்ளவர்களின் மனைவிமார்கள், அவருக்கு நிகராக கருதப் பட்டனர், ஆனால் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக அவர்கள் கருதப்பட வில்லை.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகள் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களாகவே கருதப் படுவார்கள்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று, ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பின் சரத்து 370 நீக்கப்பட்ட பின்பு, மறுசீரமைப்புச் சட்டமானது அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை “ஜம்மு காஷ்மீர்” மற்றும் “லடாக்” என்ற இரு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது.
பழங்குடியினர் அல்லாத மக்கள் அல்லது வெளியாட்கள் 6வது அட்டவணைப் பகுதியின் கீழ் எந்தவொரு நிலப்பகுதியையும் வாங்க முடியாது.
6வது அட்டவணையானது இந்திய அரசியலமைப்பின் சரத்து 244ன் கீழ் அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகியவற்றில் வசிக்கும் பழங்குடியினப் பகுதிகளின் மீதான நிர்வாகத்திற்காக சில விதிமுறைகளைக் கொண்டுள்ளது.