ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கான இந்திய ரயில்வேயின் திட்டம்
January 11 , 2020 2046 days 871 0
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 21ற்குள் ரயில்வே அமைப்பின் மூலம் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட இருப்பதாக இந்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் கொங்கன் ரயில்வே ஆகும்.
இந்திய ரயில்வேயின் கூற்றுப் படி, 150 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் சவாலான ஒரு உள்கட்டமைப்பு திட்டம் இதுவாகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கும் ஒரு பாலமானது உலகின் மிக உயரமான பாலமாக இருக்கும்.