ஜம்மு காஷ்மீர் இணைப்பு தினம் - பொது விடுமுறை தினம்
December 31 , 2019 2060 days 1391 0
ஜம்மு காஷ்மீரின் ஒன்றியப் பிரதேச அரசானது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தினத்தை 2020 ஆம் ஆண்டிற்கான ஆங்கில ஆண்டின் ஒரு பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் ஆங்கில ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலானது ஜம்மு காஷ்மீர் அரசின் பொது நிர்வாகத் துறையால் வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவின் படி, ஜூலை 13ம் தேதியன்று அனுசரிக்கப்படும் தியாகிகள் தினத்தன்றும் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படும் ஷேக் அப்துல்லாவின் பிறந்த தினத்தன்றும் அரசு விடுமுறை அங்கு இருக்காது.
1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 தேதியன்று, மகாராஜா ஹரி சிங் அப்போதைய இந்திய ஆளுநர் ஜெனரலான மவுண்ட்பேட்டனுடன் ஒரு இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
இந்த ஒப்பந்தமானது ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை பாதுகாப்பு, வெளி விவகாரங்கள் மற்றும் தகவல்தொடர்பு ஆகிய விவகாரங்களில் மட்டுமே சட்டங்கள் இயற்றும் அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது.
இதைப் பயன்படுத்தி, 370வது பிரிவானது இந்திய அரசியலமைப்பில் இணைக்கப் பட்டது.