இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் (CAG) அறிக்கை ஆனது, ஜம்மு-காஷ்மீரில் ஏரிகள் பெரிய அளவில் அழிந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.
1967 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1,537 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 697 ஏரிகளில், சுமார் 315 ஏரிகள் முற்றிலும் மறைந்துவிட்டன.
சுமார் 203 ஏரிகள் சுருங்கிவிட்டன என்பதோடுஒட்டு மொத்தமாக 518 ஏரிகள் கிட்டத்தட்ட 2,851 ஹெக்டேர் நீர் பரப்பை இழந்துள்ளன.
ஆக்கிரமிப்பு, மாசுபாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம், மோசமான கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பலவீனமான கண்காணிப்பு ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகும்.
பாதுகாப்பு முயற்சிகள் தால் ஏரி மற்றும் வுலர் ஏரி உள்ளிட்ட ஆறு ஏரிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.