ஜம்மு காஷ்மீர் தீவிரவாத போராளிகளுக்கான சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு
March 12 , 2019 2511 days 877 0
ஜம்மு காஷ்மீர் மாநில அரசானது அம்மாநிலத்தின் தீவிரவாத போராளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ஒரு கொள்கை வரைவை ஏற்படுத்தவிருக்கிறது.
இந்த வரைவின்படி, இந்தப் புதிய முன்னெடுப்பானது பின்வரும் இருமுனை அணுகுதலின் மூலம் கொள்கை நிலையில் மறுவாழ்விற்கான தேவையை அளிக்கின்றது.
சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும்
வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள்
சரணடைந்து சமூகத்தின் மைய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் தீவிரவாத போராளிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.6000 அளிப்பதற்கான விதிமுறைகள் இதில் உள்ளன.
இந்த முன்னெடுப்புகள் மற்றும் விதிமுறைகளானது கொடிய குற்றம் புரிந்த தீவிரவாத போராளிகளுக்குப் பொருந்தாது.
மாநில உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் அனுமதி பெற்ற பின்னர் மாநில நிர்வாக ஆணையம் (State Administrative Council - SAC) இந்த வரைவுப் பரிந்துரைகளை செயல்படுத்தும்.
மாநில நிர்வாக ஆணையமானது அம்மாநில ஆளுநர் தலைமையில் அவரின் நான்கு ஆலோசகர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரைக் கொண்டிருக்கும்.