தர்பார்/அரசவை இடமாற்றம் என்பது கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கும் குளிர்கால தலைநகரான ஜம்முவுக்கும் இடையிலான அரசு அலுவலகங்களின் பருவ கால மாற்றமாகும்.
150 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பாரம்பரியமானது, 1872 ஆம் ஆண்டு மகாராஜா ரன்பீர் சிங்கால் அறிமுகப்படுத்தப் பட்டது.
நான்கு ஆண்டுகள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் இது மீண்டும் புதுப்பிக்கப் பட்டது.
ஸ்ரீநகர் அலுவலகங்கள் அக்டோபர் 31 ஆம் தேதியன்று மூடப்பட்டு நவம்பர் 03 அன்று ஜம்முவில் மீண்டும் திறக்கப்படும்.
கடுமையான வானிலை இருந்த போதிலும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் ஆளுகையை இந்த நடைமுறை உறுதி செய்கிறது.
இதற்கு வருடாந்திரச் செலவினம் சுமார் 200 கோடி ரூபாயாகும் என்பதோடுமேலும் இந்த நடவடிக்கை ஜம்முவின் பொருளாதாரத்தை ஆதரித்து, அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது.
மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் இதே போன்ற இரட்டை தலைநகர அமைப்புகள் உள்ளன.