கலாச்சாரத் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சகமானது “இந்திய கைவினைப் பொருள்கள்/கைத்தறி, கலை மற்றும் கலாச்சாரத்திற்கான ஜரோக்கா தொகுப்பு” என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இது பாரம்பரிய இந்தியக் கைவினைப் பொருட்கள், கைத்தறிகள் மற்றும் கலை & கலாச்சாரத்தினைக் கொண்டாடுவதற்கானதாகும்.
இந்தக் கொண்டாட்டங்களின் கீழான முதல் நிகழ்ச்சியானது மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள இராணி கம்லாபதி இரயில்வே நிலையத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஜரோக்கா என்பது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஓர் அங்கமாக 13 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலுள்ள 16 இடங்களில் நடத்தப்படும் இந்தியா முழுவதுமான ஒரு நிகழ்ச்சியாகும்.