TNPSC Thervupettagam

ஜரோசைட் கனிமம்

September 7 , 2025 5 days 32 0
  • குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மத்தனோமத் கிராமத்தில் மஞ்சள் நிறத்தில் இரும்புச்சத்து நிறைந்த சல்பேட் கனிமமான ஜரோசைட் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
  • சுமார் 55 மில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையான ஜரோசைட் 2004 ஆம் ஆண்டில் நாசாவின் Opportunity ஆய்வுக் கலத்தினால் செவ்வாய்க் கிரகத்தில் கண்டுபிடிக்கப் பட்ட கனிமங்களை ஒத்திருக்கிறது.
  • செவ்வாய் கிரகத்தைப் போன்ற புவியியல் சூழல்களைக் கொண்டுள்ள மத்தனோமத் தளம் ஆனது, இந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலமான மங்கள்யான்-2 கலத்திற்கு ஒரு சாத்தியமான சோதனைத் தளமாக அமைகிறது.
  • புவியில் ஜரோசைட் உருவாக்கம் ஆனது எரிமலைச் செயல்பாடு மற்றும் தண்ணீருடன் இணைக்கப் பட்டுள்ளதோடு இது புவியின் கட்ச் மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்கு இடையிலான கடந்தகாலச் சுற்றுச்சூழல் ஒற்றுமைகளைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்