TNPSC Thervupettagam

ஜல் சக்தி தரவுப் பகிர்வுக் கொள்கை

August 25 , 2026 16 hrs 0 min 35 0
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையானது தரவுப் பகிர்வு, இயங்குதன்மை மற்றும் பங்குதாரர்களின் அணுகல் தொடர்பான கொள்கையை புது தில்லியில் வெளியிட்டது.
  • இந்தக் கொள்கையானது மத்திய அரசு, மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள், கிராம ஊராட்சிகள் மற்றும் ஊரக குடிநீர்த் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களுக்கான கூட்டாட்சி தரவுப் பகிர்வு கட்டமைப்பை உருவாக்குகிறது.
  • இது பாதுகாப்பான மற்றும் சுமூகமான தரவுப் பரிமாற்றத்திற்கு பொதுவான அடையாளங்காட்டிகள், தரப்படுத்தப்பட்ட மீத்தரவு (metadata), இயங்கக்கூடிய பதிவேடுகள் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துகிறது.
  • கிராம ஊராட்சிகள் சொத்துக் கண்காணிப்பு, குறை தீர்த்தல் மற்றும் சேவைப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கும்.
  • இந்தக் கொள்கையானது, நோக்கம் சார்ந்த தரவு அணுகல் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பகுப்பாய்வு, புவியியல் ரீதியான திட்டமிடல், நீரின் தரக் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் ட்வின்ஸ் (Digital Twins) ஆகியவற்றை ஆதரிக்கிறது.
  • இது ஊரக குடிநீர் சேவை வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் திட்டம் (JJM) 2.0-இன் கீழ் உள்ள சுஜலம் பாரத் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்