கர்நாடகாவின் பிடார் மாவட்டம் சிறந்த நீர் வளங்காப்பு முன்னெடுப்புகளுக்காக ஜல் சக்தி அபியான்: மழைநீர் சேமிப்புப் பிரச்சாரத்தின் கீழ் மத்திய அரசின் ஜல் சஞ்சய் ஜன் பாகீதாரி விருதை வென்றுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் மூன்றாம் வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 80 மாவட்டங்களில் பிடார் மாவட்டமும் ஒன்றாகும் என்பதோடு மேலும் இந்த விருதினை வென்ற ஒரே கல்யாண கர்நாடகா பிராந்தியத்தினைச் சேர்ந்த மாவட்டமும் இதுவே ஆகும்.
கர்நாடகாவில் இருந்து மொத்தம் ஆறு மாவட்டங்கள் இந்த விருதைப் பெற்றன.
இந்தப் பிரச்சாரம் ஆனது இந்தியா முழுவதும் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப் படும் நீர் வளங்காப்பு மற்றும் நிலத்தடி நீர் மீளேற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
பிடார் மாவட்டத்தின் முன்னெடுப்புகளில் பின்வருவன அடங்கும்:
சிறிய தடுப்பணைகள், கட்டுமானப் பாளத்திற்கான சட்ட கட்டமைப்புகள், ஓடைத் தடுப்புகள், கசிவு நீர்க் குட்டைகள் மற்றும் ஊறுகுழிகள் ஆகியவற்றின் கட்டுமானம்.
டாங்கா எனப்படும் நிலத்தடி மழை நீர்ச் சேமிப்பு அமைப்புகள் மற்றும் படிக் கிணறுகள் போன்ற பாரம்பரிய மழை நீர்ச் சேமிப்பு முறைகளைப் பயன்படுத்துதல்.
MGNREGA திட்டத்தின் கீழ் வண்டல் பதிவு நீக்கும் பணிகள் மற்றும் வேளாண் வயல்களில் அகழிகள் அமைத்தல்.