ஜல் ஜீவன் திட்டமானது, 50 சதவீத கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் நீர் இணைப்பு வசதிகளைப் பெற்றதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
‘ஹர் கர் ஜல்’ திட்டமானது, ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழான ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
கோவா, தெலுங்கானா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, புதுச்சேரி மற்றும் ஹரியானா ஆகியவை ஏற்கனவே 100 சதவீத அளவிலான குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளைப் பெற்றுள்ளன.
பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளைக் கொண்டு உள்ளன.