ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 15.71 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளுக்கு (80 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புற வீடுகளில்) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
இந்தத் திட்டமானது, ஒவ்வொரு வீட்டிற்கும் நிலைத் தன்மை, செயல்பாடு மற்றும் நம்பகமான குடிநீர் சேவை வழங்கலில் கவனம் செலுத்துகிறது.
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் சக கற்றலை ஊக்குவிப்பதற்காக "பெய்ஜல் சம்வாத்" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டமானது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.