TNPSC Thervupettagam

ஜல் மஹோத்சவ் 2026 பிரச்சாரம்

March 30 , 2026 11 hrs 0 min 44 0
  • ஜல் மஹோத்சவ் 2026 சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ஜல் சக்தி துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • ஜல் மஹோத்சவ் என்பது நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக மார்ச் 8 முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் ஒரு நாடு தழுவிய பிரச்சாரமாகும்.
  • இது குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையால் ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இதில் சமூகப் பங்கேற்பை உறுதி செய்ய ஜல் அர்ப்பண் திவாஸ், ஜல் சங்கல்ப் (நீர் உறுதிமொழி) மற்றும் ஜல் பந்தன் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
  • இந்தப் பிரச்சாரம் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராமப் பஞ்சாயத்து நிலைகளில் செயல்படுகிறது.
  • கள ஆய்வுக் கருவிகளை (FTKs) பயன்படுத்தி நீர் பரிசோதனை மற்றும் மேலாண்மையில் லட்சக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளதால், இதில் பெண்களின் பங்கு முக்கியமானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்