மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் அடிப்படைக் கல்வி நிலைக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கான "ஜாதுய் பிடாரா" என்ற பாடத் திட்டத்தினை வெளியிட்டார்.
இது 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான விளையாட்டு முறை அடிப்படையிலான கற்றல் திட்டமாகும்.
இது 13 வெவ்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது.
இது தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது.