பீகார் மறுசீரமைப்புச் சட்டம், 2000-த்தின் கீழ் தெற்கு பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு, இந்தியாவின் 28-வது மாநிலமானது.
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் (1875 ஆம் ஆண்டு நவம்பர் 15) பிறந்தநாளில் இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பழங்குடியின சமூகங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக உல்குலான் (மாபெரும் கிளர்ச்சி) இயக்கத்தை (1899–1900) அவர் வழிநடத்தினார்.
பிர்சா முண்டா 'தரத்தி ஆபா' (பூமியின் தந்தை) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
முக்கியமாக சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் மிக உயரமான சிகரம் பரசநாத் குன்று ஆகும்.