பஞ்சாபி புதினங்களின் தந்தை என்றும் அறியப்படும் பஞ்சாபிக் கவிஞரான நானக் சிங்கால் 1919, ஏப்ரல் 13-ம் தேதி நிகழ்ந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை மீதான கவிதை ஒன்று எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த கவிதை பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான ஒரு கடுமையான விமர்சனமாகும். அதன் வெளியீட்டிற்குப் பிறகு அது தடை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக அதன் கையெழுத்துப் பிரதியும் தொலைக்கப்பட்டது.
99 வருடங்களுக்குப் பிறகு அந்த ஆசிரியரின் பேரனும் ராஜதந்திரி அதிகாரியுமான நவ்தீப் சூரியால் அந்த கவிதை மீட்டெடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றது.
இது ஹார்பர் காலின் இந்திய நிறுவனத்தால் அடுத்த மாதம் நிகழும் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தை அனுசரிப்பதற்காக பிரசுரிக்கப்படும்.