TNPSC Thervupettagam

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் - ஏப்ரல் 13

April 15 , 2024 31 days 95 0
  • ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆனது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது.
  • ஆயிரக்கணக்கான இந்திய எதிர்ப்பாளர்கள் பைசாகி என்ற வசந்த கால விழாவைக் கொண்டாடுவதற்காக அமைதியான முறையில் திரண்டிருந்தனர்.
  • அனைத்துப் பக்கங்களிலும் சுவர்களால் சூழப்பட்ட இப்பகுதியில் ஒரே ஒரு குறுகிய நுழைவாயில் மட்டுமே இருந்தது.
  • எந்தவித முன் எச்சரிக்கையின்றி, படைப் பிரிவுத் தளபதி ரெஜினோல்ட் டயர், ஐம்பது ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் ஜாலியன்வாலாபாக் பகுதிக்குள் அணி வகுத்துச் சென்று, அங்கு திரண்டிருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.
  • சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டில், சுமார் 379 பேர் கொல்லப் பட்டனர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்