ஜாலியன்வாலா பாக் படுகொலை நாள் - ஏப்ரல் 13
April 14 , 2021
1581 days
683
- ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பது 1919 ஆம் ஆண்டில் அமிர்தசரஸின் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் நடந்த சம்பவத்தைக் குறிக்கிறது.
- இந்த ஆண்டு இச்சம்பவத்தின் 102வது ஆண்டு நிறைவாகும்.
- 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று பைசாகி என்ற பண்டிகையைக் கொண்டாட வேண்டி ஜாலியன்வாலா பாக்கில் மக்கள் கூடினர்.
- காவல் அதிகாரி ஜெனரல் டயர் தனது படைகளுக்கு அங்கு இருந்த மக்களைச் சுடுமாறு உத்தரவிட்டார்.
- இதன் பின்னர், இதை விசாரிக்க ஹண்டர் கமிஷன் அமைக்கப்பட்டது.
- ஆனால் ஜெனரல் டயரின் நடவடிக்கையைப் பஞ்சாப் துணைநிலை ஆளுநர் சர் மைக்கேல் ஓ டயர் பாராட்டியிருந்தார்.

Post Views:
683