July 13 , 2021
1441 days
548
- கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஜிகா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
- ஜிகா வைரசானது, ஏடிஸ் இனத்தை சேர்ந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட கொசுக்களால் குறிப்பாக ஏடிஸ் எஜிப்தி கொசுக்களால் பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
- ஏடிஸ் கொசுக்கள் டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களையும் பரப்புகின்றன.
- இவை வழக்கமாக பகல் நேரங்களில் கடிக்கின்றன, அதிலும் பெரும்பாலும் அதிகாலை (அ) பிற்பகல் நேரங்களில் கடிக்கின்றன.
- தொற்று ஏற்பட்ட நபராலும் இந்த வைரஸ் பரவுகிறது.
- இந்த வைரசானது 1947 ஆம் ஆண்டில் உகாண்டா நாட்டில் உள்ள குரங்குகளில் முதன் முறையாக கண்டறியப்பட்டது.
- இது 1952 ஆம் ஆண்டில் உகாண்டா மற்றும் ஐக்கிய தான்சானியக் குடியரசு ஆகிய நாடுகளில் மனிதர்களில் கண்டறியப்பட்டது.
Post Views:
548