TNPSC Thervupettagam

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

October 9 , 2021 1378 days 1617 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கார்பெட் தேசியப் பூங்காவின் பெயரை ராம்கங்கா தேசியப் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்வதற்கு முன்மொழிந்துள்ளார்.
  • ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இந்தப் பூங்காவானது ராம்கங்கா நதியினால் உருவாக்கப்பட்ட பட்லி டூன் என்ற ஒரு பள்ளத்தாக்கினை உள்ளடக்கியதாகும்.
  • இந்த தேசியப் பூங்காவானது அருகி வரும் வங்காளப் புலியைப் பாதுகாப்பதற்காக வேண்டி ஹைய்லே தேசியப் பூங்காவாக 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த ஜிம் கார்பெட் என்பவரின் நினைவாக இந்தப் பூங்காவிற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • இது இந்தியாவின் மிகப்பழமையான தேசியப் பூங்காவாகும்.
  • இது 1973 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Project Tiger) என்ற ஒரு முன்னெடுப்பின் கீழ் கொண்ட வரப்பட்ட முதல் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்