2013 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜியோ பார்சி திட்டத்தின் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 214 குழந்தைப் பிறப்புகள் செயற்கை கருத்தரிப்பு நுட்பங்கள் மூலம் பிறந்துள்ளன.
இந்தத் திட்டமானது பண ஊக்கத் தொகை அளிப்பதன் மூலம் குறைந்து வரும் பார்சி இன மக்கள்தொகையைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, பார்சி மக்கள் தொகை 1941 ஆம் ஆண்டில் சுமார் 114,000 ஆக இருந்தது. அது 2011 ஆம் ஆண்டில் 57,264 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பார்சி மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர்.அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் பார்சி மக்கள் உள்ளனர்.