ஜீனியர் உலக சாம்பியன்சிப் – இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்கள்
October 16 , 2021 1491 days 673 0
2021 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி கூட்டமைப்பின் ஜீனியர் உலக சாம்பியன்சிப் ரைபிள்/பிஸ்டல்/சாட்கன் என்ற போட்டியானது பெரு நாட்டின் லைமா எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
இதில் இந்திய வீரர்கள் 43 பதக்கங்களுடன் வரலாறு காணாத அளவிலான வெற்றியினைப் பெற்றுப் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
இதில் 17 தங்கம், 16 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
அமெரிக்க நாடானது 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 21 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.