April 22 , 2026
8 days
87
- ஜீனோம் இந்தியா திட்டத்தின் (GIP) தரவுகள் சுமார் 44 மில்லியன் தனித்துவமான இந்திய மரபணு மாறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
- இந்த ஆய்வு இந்திய மக்களிடையே 129 மில்லியனுக்கும் அதிகமான மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளது.
- ஒரே சமூகத்திற்குள் திருமணம் செய்துகொள்வது (endogamy) தனித்துவமான மரபணுக் குழுக்களை உருவாக்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது.
- இத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் உயிரித் தொழில்நுட்பத் துறையால் (DBT) தொடங்கப் பட்டது.
- இது இந்தியா முழுவதும் உள்ள 83 மக்கள் குழுக்களைச் சேர்ந்த 10,000 நபர்களை ஆய்வு செய்தது.
- இது நோய்களைச் சிறப்பாகக் கணிக்கவும், குறிப்பிட்ட மக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
Post Views:
87