TNPSC Thervupettagam

ஜெனரல் நெக்ஸ்ட் மக்களாட்சிக் கட்டமைப்பு

June 3 , 2022 1162 days 511 0
  • இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான சபையின் பத்து நாட்கள் அளவிலான ஒரு நிகழ்ச்சியான ஜெனரல் நெக்ஸ்ட் மக்களாட்சிக் கட்டமைப்பு நிகழ்ச்சி முடிவடைந்தது.
  • பல்வேறு ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஜென் நெக்ஸ்ட் டெமாக்ரசி நெட்வொர்க் திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
  • இதன் நிறைவு விழாவில், கானா, வங்காள தேசம், பெரு, நேபாளம், புரூனே மற்றும் நார்வே ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 27 பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்த அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் 1950 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான சபை நிறுவப் பட்டது.
  • இது மற்ற நாடுகள் மற்றும் அவற்றின் மக்களுடனான கலாச்சாரப் பரிமாற்றம் மூலம் இந்தியாவின் உலகளாவியக் கலாச்சார உறவுகளில் இது செயலாற்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்