கர்நாடகாவின் நகர்ஹோலே புலிகள் வளங்காப்பகத்தில் வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் புலிகள் வளங்காப்பை அதிகரிக்கும் முயற்சியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனு குருபா சமூகத்தினர் வெளியேற்றப் பட்டனர்.
சமீபத்தில் அவர்கள் தங்களின் பூர்வீகப் பகுதிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் பழங்குடியின மக்கள் இந்த வழியில் தங்கள் முக்கிய உரிமைகளை நிலை நாட்டியது இதுவே முதல் முறையாகும்.
இது 2006 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மற்றும் பிற மரபார்ந்த வன வாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டத்தின் விதிகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
நாகர்ஹோலேவில் இருந்து சுமார் 20,000 என்ற அளவில் ஜெனு குருபா மக்கள் சட்ட விரோதமாக வெளியேற்றப் பட்டுள்ளனர்.
6,000 பேர் இதனை எதிர்த்து அந்தப் பூங்கா பகுதியிலேயே தங்கினர்.