ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு புலிகள் சரணாலயத்திற்குள் (PTR) அமைந்து உள்ள ஜெய்கிர் கிராமம், அந்தச் சரணாலயத்தின் மைய (பாதுகாக்கப்பட்ட) பகுதிக்கு வெளியே முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்ட முதல் கிராமமாக மாறுகிறது.
ஜெய்கிரின் புதிய இடம் ஆனது மையப் பகுதிக்கு வெளியே போல்போல் கிராமத்திற்கு அருகில் அமைய உள்ளது.
பழைய ஜெய்கிர் புலிகளின் இரைகளை ஈர்க்கும் புல்வெளியாக மாறும்.
இடமாற்றத்திற்காக மேலும் எட்டு கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தக் காப்பகம் ஆனது, தற்போது இந்த கிராமங்கள் அமைந்துள்ள 414.08 சதுர கிலோ மீட்டர் மையப் பரப்பளவுடன் 1129.93 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை உள்ளடக்கியது.