இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோர் இணைந்து ஜெய்ப்பூரில் உலகின் 3வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தினை நிறுவுவதற்கான அடிக்கல்லினை நாட்டினர்.
இந்த மைதானமானது இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானமாகவும், உலகின் 3வது மிகப்பெரிய மைதானமாகவும் திகழும்.
இந்தப் புதிய மைதானமானது ஜெய்ப்பூர் – டெல்லி நெடுஞ்சாலையின் அருகே இராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியினால் கட்டமைக்கப்படும்.
தற்போது, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானமானது (முன்னதாக மோதேரா மைதானம்) உலகின் மிகப்பெரிய மைதானமாக திகழ்கிறது.
உலகின் 2வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமாகும்.