ஜெர்மனியில் உள்ள அறிவியல் ஆய்வாளர்கள் அணுக்கரு இணைவு மூலம் வரம்பற்ற அளவிலான ஆற்றலில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளனர்.
வெண்டெல்ஸ்டீன் 7-X உலையைக் கொண்டு, இந்த ஆராய்ச்சியாளர்கள் இணைவுப் பிளாஸ்மாவை சுமார் 43 வினாடிகள் நிலைக்க வைத்து, ஒரு புதிய சாதனையைப் படைத்தனர்.
இது உலகின் மிகப்பெரியச் செயல்பாட்டு ஸ்டெல்லரேட்டர் (அணுக்கரு இணைவுக் கருவி) ஆகும்.
இது அதி வெப்பப்படுத்தப்பட்ட பிளாஸ்மாவை கட்டுப்படுத்துவதற்காக சக்தி வாய்ந்த வெளிப்புற காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் ஒரு வகையான அணுக்கரு இணைவு உலையாகும்.
ஜப்பானில் தற்போது செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட JT60U மற்றும் ஐக்கியப் பேரரசில் உள்ள JET ஆகியன வரலாற்று ரீதியாக அணுக்கரு இணைவு சோதனைகளில் முன்னிலை வகித்தன.
2023 ஆம் ஆண்டில், "செயற்கை சூரியன்" என்றும் அழைக்கப்படும் சீனாவின் மிகவும் மேம்படுத்தப் பட்ட மீக்கடத்தல் டோகாமாக் வெப்பமாக்கல் அமைப்பு (EAST) ஆனது, பிளாஸ்மாவை 1,000 வினாடிகள் நிலைக்க செய்தது.