TNPSC Thervupettagam

ஜெல்லிமீன் வடிவ உயிரியளமைப்பினை ஒத்த தானியங்கிகள்

October 30 , 2025 16 hrs 0 min 29 0
  • கடலடி ரேடாருக்குப் புலப்படாத வகையிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஒரு வெளிப்படையான, ஜெல்லிமீன் வடிவ உயிரியளமைப்பினை ஒத்தத் தானியங்கிகள் / பயோனிக் ரோபோவை சீனா உருவாக்கியுள்ளது.
  • இந்தச் சாதனம் மென்மையான ஹைட்ரோஜெல் மற்றும் குறைந்த ஆற்றல் கொண்ட இயக்கிகளைப் பயன்படுத்தி ஜெல்லிமீன் இயக்கங்களைப் பிரதிபலிப்பதால், இது அமைதியான இயக்கத்தினைச் செயல்படுத்துகிறது.
  • இதில் ஒரு செயற்கை நுண்ணறிவு சில்லு மற்றும் ஓர் ஒளிப்படக் கருவிப் பொருத்தப் பட்டுள்ளது என்பதோடு மேலும் இது கடல்வாழ் உயிரினங்களைக் கண்காணிக்கவும், நீருக்கடியில் உள்ள பொருட்களை அடையாளம் காணவும் கூடியது.
  • 120 மி.மீ, 56 கிராம் எடை கொண்ட இந்த ரோபோ குறைந்தபட்ச ஆற்றல் மற்றும் இடையூறுடன் இயங்குவதால், நீண்ட காலக் கண்காணிப்புக்கு ஏற்றதாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்