TNPSC Thervupettagam

ஜோத்புரி மோஜாரி – ராஜஸ்தான்

July 16 , 2026 12 days 77 0
  • ஜோத்பூரின் சற்றேறத்தாழ 200 ஆண்டுகள் பழமையான 'மோஜாரி' (Mojari) கைவினைப் பொருளுக்கு மத்திய அரசிடமிருந்து புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  • ஜோத்புரி மோஜாரி என்பது ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த பாரம்பரியமாக கையால் செய்யப்பட்ட பாதணிகளாகும் என்பதோடு இது முக்கியமாக ஜினாகர் சமூகத்தினரால் தயாரிக்கப்படுகிறது.
  • ஒட்டகம், ஆடு, பசு மற்றும் எருமை ஆகியவற்றின் தோல்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் இந்தக் கைவினைப் பொருள் நெகிழ்வானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும், ராஜஸ்தானின் பருவநிலைக்கு ஏற்றதாகவும் பெயர் பெற்றது.
  • வரலாற்று ரீதியாக, ஜினாகர் சமூகத்தினர் படைகளுக்காக ஜீன் (சிறு சேணங்கள்) மற்றும் மயான் (தோலால் செய்யப்பட்ட வாள்/கத்தி உறைகள்) ஆகியவற்றைத் தயாரித்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்