TNPSC Thervupettagam
July 17 , 2026 12 days 146 0
  • தமிழ் கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான ஆர். வைரமுத்துவுக்கு புது தில்லியில் 60-வது ஞானபீட விருது (2025) வழங்கப்பட்டது.
  • அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு, 24 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் இந்த விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவராவார்.
  • அவர் தனது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
  • 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஞானபீட விருது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும் என்பதுடன் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள எந்தவொரு மொழியிலும் இலக்கியத்திற்கான வாழ்நாள் பங்களிப்பிற்காக இது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
  • இந்திய மொழிகள், இலக்கியம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக 1944 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பாரதிய ஞானபீடம்' என்ற அமைப்பால் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த விருது ₹11 லட்சம் ரொக்கப் பரிசு, வாக்தேவி தேவியின் வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்