TNPSC Thervupettagam

டகேஷிமா - டோக்டோ தீவு தகராறு

February 27 , 2026 19 days 102 0
  • பிப்ரவரி 22, 2026 அன்று ஷிமானே மாகாணத்தில் நடைபெற்ற ஜப்பானின் டகேஷிமா தின நிகழ்வுக்கு எதிராக தென் கொரியா ஒரு இராஜதந்திர எதிர்ப்பை பதிவு செய்தது.
  • இந்தத் தீவுகள் ஜப்பானில் தகேஷிமா என்றும் தென் கொரியாவில் டோக்டோ என்றும் அழைக்கப்படுகின்றன.
  • அவை ஜப்பான் கடலில் அமைந்துள்ளன என்ற ஒரு நிலையில் இதை தென் கொரியா கிழக்கு கடல் என்று குறிப்பிடுகிறது.
  • இந்தப் பிரதேசம் டோங்டோ மற்றும் சியோடோ என்ற இரண்டு முக்கிய தீவுகளையும், பல சிறிய பாறைகளையும் கொண்டுள்ளது.
  • தென் கொரியா 1954 ஆம் ஆண்டு முதல் காவல்துறையினரை நியமித்து இத்தீவுகளின் மீது கட்டுப்பாட்டைப் பராமரித்து வருகிறது.
  • ஜப்பான் இந்தத் தீவுகளை ஷிமானே மாகாணத்தின் ஒரு பகுதியாகக் கூறி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 அன்று தாகேஷிமா தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
  • இதைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் மீன்வளத்தால் நிறைந்துள்ளன என்ற ஒரு நிலையில் அவற்றில் குறிப்பிடத் தக்க அளவு எரிவாயு ஹைட்ரேட்டுகள் இருப்பதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்