பிரான்சின் விமான உற்பத்தியாளரான டசால்ட் விமான நிறுவனத்துடன் ஒரு மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் (Directorate of Employment and Training) கையெழுத்திட்டு இருக்கின்றது.
விமானக் கட்டமைப்பு மற்றும் உதிரி பாகங்களைப் பொருத்தும் துறையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அது தமிழ்நாட்டில் இரண்டு தொழில் பயிற்சி நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 3 பயிற்சி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றது.
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிலையங்கள் :
மத்திய அரசால் சென்னையில் நடத்தப்படும் தேசிய திறன் பயிற்சி நிலையம்
மாநில அரசால் கோயம்புத்தூரில் நடத்தப்படும் ஐடிஐ.
இத்திட்டத்திற்காக மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருக்கின்றது.