டஸ்ட்லிக் - 2019: இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சி
November 3 , 2019 2084 days 734 0
இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சியான டஸ்ட்லிக் - 2019 என்ற பயிற்சியின் தொடக்க நிகழ்விற்கு மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் மற்றும் உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்தும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சியானது நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை தாஷ்கண்டிற்கு அருகிலுள்ள சிர்ச்சிக் பயிற்சி பகுதியில் நடத்தப்பட இருக்கின்றது.
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில் உஸ்பெகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.